ஸஹோதரி ஸ்ரீமதி சாவித்ரிக்கு
ருதம்பரா ஞான ஸபா சார்பில்
06-02-2011 அன்று
அம்பிகையை அடிபணிந்து
அருள் வேண்டி வாழ்கின்ற
சாவித்ரி அவர்களுக்கு
அறுபதாண்டு ஆனது !
பொறுமையாக வாழ்பவள் !
பரம்பொருளை அறிபவள் !
தரம் பிரித்து தத்துவத்தை
திருவருளால் அறிபவள் !
மன்னார்குடி மண்ணிலே
முதலாய்ப் பிறந்தவள் !
சென்னை நகரினிலே
சீர்வாழ்க்கை வாழ்பவள் !
அரசாங்க வேலையிலே
பொறுப்பாக இருந்ததினால்
சாப்பாட்டு நேரத்திலும்
சர்க்கார் கோப்பிடையில் (கோட்டையில்)
சுறுசுறுப்பாய் இருந்தவள் !
அருட்சக்தி குரு கூறும்
பொருள் புரிந்து பக்குவமாய்
சாத்திரத்தின் சத்தியத்தை
சகத்தினிலே உணர்ந்தவள் !
சுந்தர் என்று என்னிடம்
சகஜமாக இருப்பவள் !
மைதிலியின் மனதினிலே
மதிப்பை மிக பெற்றவள் !
அவள் குடும்பம் மிகப் பெரியது !
அக்கா தங்கை தம்பி என
அவள் குடும்பம் மிகப் பெரியது !
அனைவரையும் அனுசரித்து
உதவி செய்து வாழ்பவள் !
ஸ்ரீவித்யை ஜபம் பூஜை என
சரியாக தினம் செய்பவள் !
அன்னையவள் அருள் பெற்று
அவனியிலே சிறக்க வேண்டும் !
அத்வைத காக்ஷியினை
சித்தத்திலே தான் கண்டு
ஏழுவித பூமிகையை
ஏற்றமாய்ப் பெற வேண்டும் !
புவனத்தாய் அவளுக்கு
பெருமை மிக தந்தவளாம் !
அருமையாக அவள் புகழ்
அவனியிலே நிற்க வேண்டும் !
எழுத எனக்கு இங்கே
ஏதுவாக வராதென்று
ஏங்கித் தவிக்காமல்
ஏற்றம் மிகப்பலவாய்
எழுதி சிறக்க வேண்டும் !
குருநாதன் கூறிவிட்டால்
குற்றமெலாம் போய்விடுமே !
சுற்றமெலாம் கூடிவர
ஏற்றமெலாம் எதிரே வர
பற்றில்லா உங்கள் வாழ்க்கையிலே
அறுபதாண்டு அனுபவத்தில்
சிறிதான கவி தந்தேன் !
அரிதெனவே ஏற்றிங்கே
உரிய புகழ் பெற்றிடுங்கள் !
![]()




Users Today : 140
Users Yesterday : 188
Total Users : 46367
Views Today : 571