தைத்திருநாளில் தாயவள் வருவாள் !

தைத்திருநாளில் தாயவள் வருவாள் !
உலகிலே ஓர் உண்மை
உணர்ந்திடக்கூறுகின்றேன் !
குழந்தையை வளர்ப்பதிங்கே
அழகான ஓர் கவிதை !
கவிதையிலே பொய் அழகு என்பார் !
உண்மைதான் உண்மையில் அழகு !
உண்மை பேசும் குழந்தை வேண்டும் !
படிப்பதிலே பாங்கு வேண்டும் !
நன்றாகப்படித்துவிட்டால்
நல்ல வேலை நாட்டில் உண்டு !
கை நிறைய சம்பளம் வேண்டி
கடுமையாக உழைப்பதுண்டு !
அங்கே (அலுவலகத்தில்)
நல்ல பெயர் வாங்கவேண்டும் !
ஐபிஎஸ் ஆனால் கூட
அகங்காரம் அகற்ற வேண்டும் !
அதிகார போதை கொண்டு
அதட்டுகின்ற குணம் எதற்கு ?
மனிதனை மனிதனாய் ஆக்கும்
மந்திரம் ஜபிக்க வேண்டும் !
மாடு போல வேலை செய்து
பின்பு
மாலை வந்து வீட்டில் அடையும்
சிறிதான வேலை இருந்தும்
சிக்கனம் தன்னைக்கொண்டு
சீராக வாழவேண்டும் !
பெரிதான பதவி இருந்தும்
பண்புதான் பெரிய கூலி !
குழந்தையை வளர்க்கும் போதே
இந்த குணங்களை கூறவேண்டும் !
பொறியியல் படித்து பின்பு
பொறியாளர் ஆனால் கூட
வரியோர்க்கு உதவும் வகையை (மனதில்)
வரிவரியாய் பொறிக்க வேண்டும் !
அன்று
கடன் உடன் வாங்கவேண்டாம் !
கடமையை செய் என்பார் !
இன்றோ?
கடமையைச் செய்யக்கூட
கடன்வாங்க வங்கி உண்டு !
தொடராக படிக்கக்கூட
வங்கிக் கடனை உடன் வாங்கி,
வேலை வாங்க விலையைக் கொடுத்து,
கலையினை கடையில் விற்று,
வீடுவாங்க லோனும் பெற்று,
தொலைதூரம் பறந்த பின்னும் (வங்கிக்)
கிளையெல்லாம் கூட வந்து
ஈ எம் ஐ எடுத்துச் செல்லும்
இயல்பு இன்று !
அதனால் தான் சொல்லுகின்றேன் –
சிக்கனமாய் வாழ வேண்டும் !
சிந்தனையில் சிக்கனம் வேண்டாம் !
உண்மையில் உலகினிலே
மன வளர்ச்சி குறைவு என்றால்
சுயநலக் கொள்கை தானே !
இயல்புக்கு மாறி வாழ்க்கை
ஏனிங்கே வாழ வேண்டும் ?
நல்ல பேச்சு பேசா விட்டால்
நாமும் கூட பைத்தியம்தான் !
சோட்டானிக் கரைதனிலே
சுந்தரி ஒருவள் உள்ளாள் !
அவள்
போட்டா போட்டி போடும்
பகட்டான வாழ்வு என்ற
பைத்தியம் தெளிய வைப்பாள் !
நானார் என்றறியும்
நல்ல குணம் நமக்குத் தருவாள் !
தீமை குணம் பதிமூன்றென்பார் !
துர்க்கையவள் பெயரைக் கூறு !
துடைத்திடுவாள் தீய குண்த்தை !
படை உண்டு அவளுக்கிங்கே !
பேதம் இன்றி போதம் தருவாள் !
தை மாதம் பிறந்து விட்டால்
பாதை மாறும் பகலவன் இங்கே!
மனத்தில் தைக்கும் படி கூறுகின்றேன் !
தை தை என்று குதித்து
உதைக்கின்ற ஊறு வேண்டாம் !
மனத்தகத்து தை பிறந்தால் (நல்)
குணம் என்ற கதிரவன் வருவான் !
வாழ்க்கைப் பாதை மாறிப்போகும் !
காழ்ப்புணர்ச்சி கழன்று போகும் !
நம்மைப்போல் பிறரை எண்ணும்
செம்மையான சூரியன் உதிக்கும் !
ஞாயிறென்ற குருவும் கதிக்கும் !
ஞானமென்ற நல்ல கதியில்
நம்மனது நன்றாய்ப் பழகும் !
கரும்பு என்பதினிக்கும் மனதை
கடவுளுக்கு படைக்க வேண்டும் !
சிவன் என்றால் மங்களம் என்பார் !
சிவப்பான மஞ்சள் கிழங்கு
சிதறாத நம் புத்திதானே !
புத்தித் தெளிவு வேண்டுமென்றால்
பகலவனைப் பூஜை செய்யி !
பக்குவத்தை பரமாய்த் தருவார் !
பாதையினை மாற்றித் தருவார் !
பதவி உயர்ந்தால் மதிப்பு உயரும் !
பணம் கூட பாதி உயரும் !
விலையில்லா விவேகம் வருமோ?
அதை
விதைக்க வேண்டும் உரிய வயதில் !
பாதையிலே கிடப்போர் கண்டு
பதை பதைக்க வேண்டும் நெஞ்சம் !
கதை கதையாய் சொல்லவேண்டும்
குழந்தையாய் இருக்கும் போதே !
டார்ச்சர் இந்த டீச்சர் என்ற
எண்ணமதை முழுதும் நீக்கி
டார்ச்சு இந்த டீச்சர் என்னும்
வாழ்க்கையிலே இருட்டை போக்கும்
டார்ச்சு இந்த டீச்சர் என்னும்
தத்துவத்தை காண வேண்டும் !
கைபேசி தொலைந்துவிட்டால்
கடவுளிங்கே மறந்து போகும்,
குணத்தை இங்கு மாற்றவேண்டும் !
குழந்தையிடம் கடவுள் கதையை
அழும் போது அழகாய்க்கூறின்
அது
விழும் போது
வாழ்க்கையிலே கீழே
விழும் போது
உதவி செய்யும் !
அப்போது
பணம் பணமாய்க் கட்ட வேண்டாம்,
பொறியியல் படிப்பு கூட
பொதுவுடைமை ஆகிப்போகும் !
கடவுள் பக்தி வந்துவிட்டால்
கடமையும் நன்றாய்ப் புரியும் !
துடைத்திடுவோம் தினமும் தரையை !
துடைப்போமா மனதின் கரையை !
படைத்திடுவோம் பழைய சாதம் !
துடைப்போமா உறவின் பகையை !
பொங்கிடுவோம் இன்று பொங்கல் !
பொங்கி வரும் காவிரி போலே
பொங்கவேண்டும் மனதில் பொறுமை !
அங்கமெலாம் சிலிர்ப்பை எய்த
அவள் நாமம் கூற வேண்டும் !
திங்களின் குளிர்ச்சி மனதில்
தண்மையாக தங்க வேண்டும் !
உண்மையே பேச வேண்டும் என்ற
உயர்வினை உணர வேண்டும் !
அவளை நோக்கி ஓரடி வைத்தால்
தைத்திருநாளில் தாயவள் வருவாள் !
போய் விடும் பழைய பிழைகள் !
தாயிடம் தஞ்சம் நாங்கள் !
தாயவள் தரிசனம்தான்
தைப்பொங்கல் தந்திடும் தத்துவம் !
அதனை
விைத்திட்டேன் வியனின் உலகில்
வானுயர வளர்ந்திடும் ஒருநாள் !
பதட்டத்தை நீக்கிப் பகர்ந்தேன் !
பிழை பொறுக்க வேண்டும் பெரியோர் !

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments