உறவை மதிப்போம்

உறவை மதிப்போம்
அம்மா!
உணவோடு சேர்த்து
உணர்வையும் ஊட்டுபவள்!
அப்பா!
பணத்தோடு சேர்த்து
பாசத்தையும் தருபவர்!
அண்ணன்!
சண்டையோடு சேர்த்து
சங்கடத்திலும் உதவுபவன்!
அக்கா!
அக்கரையோடு சேர்த்து
அன்பையும் அரவணைப்பையும் தருபவள்!
தம்பி!
கைபிடித்து நடக்கையில்
காசினியே மறக்கும்!
அத்தை!
ஆக்கிய பண்டத்தை
ஆவலாய்த் தருபவள்!
மாமன்!
தோள் கொடுத்து தூக்கி
துன்பத்தில் உடனிருப்பான்!
சித்தி!
நமது முன்னேற்றத்தில்
முழு கவனம் வைப்பவள்!
தாத்தா!
கதை சொல்லும்போதே
கருத்தையும் சொல்லி
கன்னத்தில் முத்தமிடுபவர்!
மனைவி!
துவளும் நேரத்தில்
அவளாய் அரவணைத்து
ஆறுதல் சொல்பவள்!
கணவன்!
தன்னை நேசிப்பவளை
பொன்னை பூட்டி
அழகு பார்ப்பவன்!
மகன்!
தெரியாத அறிவியலை
தெரிந்து கொண்டு நமக்கு
தெரியாதென்று நினைப்பவன்!
மகள்!
அருகே இருந்தால் போதும்
நமக்கு அகிலம் மறக்கும்!
பேரன் பேத்தி!
பாட்டியின் கொழுக்கட்டை தின்பார்
வீட்டை சுற்றி வலம் வருவார்
எவ்வளவு உறவுகள் இந்த வாழ்க்கையில்!
அதிகமாக அ வில்தான் அனைத்து உறவுகளும் தொடங்குகின்றன. அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, அத்திம்பேர், அம்மான்மகன், அத்தான், அத்தங்காள், அம்மாஞ்சி. இதையே நமது பரமகுருனாதர் அ என்பது பிரம்மத்தைக் குறிக்கும். அதனால் உறவினரை அழைக்கும்போதே கடவுளை அழைப்பது போல்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
பகைவனுக்கு அருள்வது அப்புறம் இருக்கட்டும். முதலில் நம் உறவுகளை மதிப்போம்! தெய்வம் நமக்கு அருளும்!

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments