சரணாகதி அடைந்தேன் பாடல்
ராகம் : நாதனாமக்ரியா
பல்லவி
சரணாகதி அடைந்தேன் ஸத்குரு பாதம்
சரணாகதி அடைந்தேன் (சரணாகதி அடைந்தேன்)
அனுபல்லவி
மரணாகமம் நீக்க ஒரு மந்திரம் சொன்னார்
கருணாமூர்த்தி அவர் கண்டுகொண்டேன் நானே. (சரணாகதி அடைந்தேன்)
சரணம்
ஒருமொழி சொன்னால் அது ஒருகோடி மந்திரம்
சருமத்தை தொட்டாலது சதுர்வேத சாஸ்திரம்
கருணையாய் நோக்கினால் காலன் எம்மாத்திரம்
அருளதை அடைந்திடும் ஞானானந்த ஸூத்திரம். (சரணாகதி அடைந்தேன்)
வேதவேதாந்தங்கள் வேணது படிக்கவில்லை
பாதம் மடக்கி ஒரு பயிற்சியும் செய்யவில்லை
நாதம் கேட்க ஒரு நாட்டமும் எனக்கில்லை
ஆதரவாய் வந்து அன்பாய் அணைத்தவரை (சரணாகதி அடைந்தேன்)
கல்லாலின் மேலிருந்து காக்ஷி கொடுத்த பாதம்
இல்லாமல் பிறவி தன்னை இருக்க செய்த பாதம்
அல்லும் பகலும் என்னை அரவணைக்கும் பாதம்
கல்லான மனப்பூவை
பொற்கமலப்பாதம் வைத்து (சரணாகதி அடைந்தேன்)
ஸபர்யையின் சாத்திரம் ஸந்ததம் சொல்பவர்
நிவிர்த்தி மார்க்கத்தில் நிலையாக
வைப்பவர்
அவித்தையை அடியோடு அகற்றிட செய்பவர்
குவிந்திடும் மனத்தினால் தினந்தினம் அவர்பாதம் (சரணாகதி அடைந்தேன்)
புகலிடம் வேறில்லை பாதந்தான் ஓர் எல்லை
சகஜ நிலை அருளும் சங்கடம் தீர்க்கும்
பகவான் என்ற பதம் பாரினில் மிகப் பொருந்தும்
அகத்தினில் வைத்தேன் அனுகிரகம் வேண்டியே (சரணாகதி அடைந்தேன்)
_வேதாந்த கவியோகி நாகசுந்தரம்_
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 43