அன்றாட வாழ்வில் ஆயிரத்தின் அன்னை!

அன்றாட வாழ்வில் ஆயிரத்தின் அன்னை!
ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழ்வை மிக சாதாரணமாக நினைக்கிறோம். பக்தி முக்தியெல்லாம் அன்றாட வாழ்வைவிட வேறானதாய் எண்ணுகிறோம் ஆனால் நம் முன்னோர்கள் நமது வாழ்வை இறை மயமாய் கண்டார்கள். நாம் சொல்லும் ஸ்லோகம் மந்திரம் பூஜை இவை அனைத்தும் நம் வாழ்வில் வெற்றி பெறவே!
ஸம்ஸார ஸாகரத்தில் உழலும் மனதை சற்று உள்திருப்பி  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமமென்னும் பிரம்மானந்த / லலிதானந்த ஸாகரத்தில் மனதை உழலவிட்டேன். அப்போது கிடைத்த முத்துக்கள் இவை.
நாம் வாழும் தினசரி வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை அன்னை லலிதா எப்படி பின்னிபிணைந்திருக்கிறாள் என்பதை அனுபவிப்போம் வாருங்கள் !
அன்னை பெற்றெடுத்தாள் –
ஸ்ரீ மாதா!
அன்னங்கள் புசிக்க வைத்தாள் –
தத்யன்னா சக்த ஸித்தா !
அறிவக்னி மூட்டிவிட்டாள் –
சிதக்னி குண்ட சம்பூதா!
நல்லோனாக உதவி செய்தாள் –
தேவகார்ய ஸ்முத்யதா!
உள்ளத்தில் ஒளி கொடுத்தாள் –
உத்யத்பானு ஸஹஸ்ராபா!
உதவிக்கரம் தந்தாள் –
சதுர்பாஹு ஸமன்விதா!
இராகத்தில் பிணைத்திட்டாள் –
இராகஸ்வரூப பாசாட்யா!
கோபத்தில் குணம் தந்தாள் –
க்ரோதாகாராங்குசோஜ்வலா!
மனதினிலே இனிமை தந்தாள் –
மனோரூபேக்ஷு கோதண்டா!
ஐம்புலனை ஆட்டுவித்தாள் –
பஞ்சதன்மாத்திர ஸாயாகா!
இல்லறத்தில் இழுத்து விட்டாள் –
சதாசிவ குடும்பிணி!
உறவாட உணர்வு தந்தாள் –
சிருங்கார ரஸ ஸம்பூர்ணா!
பிள்ளைகள் பிறந்து விட்டார் –
ஆப்ரம்மகீட ஜனனி!
தர்மத்தை செய்ய வைத்தாள் –
தரம நிலயா!
யோகத்தில் ஆழ்த்துவித்தாள் –
ப்ரம்மக்ரந்தி விபேதினி!
குண்டலினி எழுப்புவித்தாள் –
குண்டலினி !
சத்தியமே பேசி நின்றோம் –
சத்தியானந்த ஸ்வரூபிணி!
லோகத்தில் வாழவைத்தாள் –
லோகயாத்திரா விதாயினி!
பண்டிதனாய் ஆக்கிவிட்டாள் –
ஸமுத்தரண பண்டிதா!
ஆசானில் பிரியம் வைத்தோம் –
குருப்ரியா!
சந்தேகம் அகன்றதுவே –
நிச்சம்சயா!
தாராள குணம் மிகுந்ததுவே –
நிர்லோபா!
யக்ஞங்கள் பல செய்தோம் –
யக்ஞரூபா!
பூக்களால் பூஜை செய்தோம் –
குஸுமபிரியா!
தத்துவம் பல அறிந்தோம் –
தத்வமர்த்த ஸ்வரூபிணி!
வேதவேதாந்தம் தானறிந்தோம் –
வேதவேதாந்த வேத்யா!
முக்தியினைத் தானடைந்தோம் –
முக்திதா !
துக்க உலகம் தித்திப்பானது –
மித்யா ஜகததஷிட்டானா!
அனைவரிடமும் கருணை பிறந்தது –
அவ்யாஜ கருணாமூர்த்தி!
சிவசக்த்தியாய் துணை கண்டோம் –
சிவசக்தியைக்ய ரூபிணி!
வாழ்வின் முடிவில் அனுபவமே மிஞ்சியது-
லலிதாம்பிகா!

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
R.Kannan
6 years ago

ஜயசக்தி.
மிக மிக அருமை சுந்தர். நித்தியம் பாராயணம் செய்தாலும், சில நாமாக்களை தனியாக விளக்கும் போது, அதன் மஹத்துவம் புரிகிறது, மனதில் நீங்காமல் நிறைந்து விடுகிறது.

Parvathi Ganesan
Parvathi Ganesan
4 years ago

அருமையான பதிவு. நித்யம் பாராயணம் செய்யும்போது அனுபவித்து மகிழ்வோம். வாழ்த்துக்கள்