ராம ராம என்று சொன்னேன்
பாவந்தொலைஞ்சது
காமக்ரோத லோப மோஹம்
கடலில் கரைஞ்சுது
நாமத்தோட மஹிமை எந்தன்
மனமும் அறிஞ்சது
சேமம்வந்து எந்தன் வீட்டில்
சேர்ந்து கொண்டது
தந்தை சொன்ன வாக்குக்காக
காட்டில் புகுந்தவன்
சந்தை சொல்லும் சாத்திரத்தின்
சாரம் அறிந்தவன்
பிந்தை பிறந்த பரதனுக்கு
பாதுகை அளித்தவன்
சிந்தையாலும் இரு மாதர்க்
கிடம் கொடாதவன்
ஜானகியின் கரம் பிடித்து
சீராய் வாழ்ந்தவன்
மானுடத்தின் மகிமை தன்னை
வாழ்ந்து காட்டினன்
வானரர்க்கும் வேதம் சொல்லி
விளங்க வைத்தவன்
கானகத்தில் கண்ட மரத்தில்
காதல் சொன்னவன்
ராக்கதரும் நாமம் சொன்னால்
ரக்ஷிதருள் பவன்
போக்கத்த இராவணனை பின்
போய் வரவைத்தவன்
வாக்கினிலே வரம் கொடுத்து
வீடனை காத்தவன்
தீக்குளிக்க போன சீதை
தன்னை மீட்டவன்
அனுமனுக்கு ஆருயிராய் அந்த
இராமன் நிற்பவன்
அனைவருக்கும் அருள் சக்தி
தந்த ஆண்டவன்
பினை வரும் பிறவியிலும்
துணை வருபவன்
கணை தொடுத்து காலனையும்
அஞ்ச வைத்தவன்
பிணை எடுத்து சென்றவனை
போரில் கொன்றவன்
ராமாராமா என்று நீங்கள்
ஜபம் செய்யுங்கள்
நாமெடுத்த பிறவி நன்றாய்
ஆக வேண்டாமோ
சாமவேத சாத்திரங்கள் கோடி
படிக்க முடியுமோ
நாமஜபம் செய்தால் போதும்
நமக்கு நல்லது
கும்பிட்டு வாழ்கவென்று குவலயத்திற் குணர்த்தவே
எம்பிரான் நீயிங்கு இருகை கூப்பினாயோ?
அம்பிகையை சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாமென்று
நம்பிக்கை எமக்களிக்க நீயும் கை கூப்பினாயோ?
“சம்சார சாகரத்தில் சுற்றி சுற்றி வாராதீர்
எம்மான் இறைவனை இருகை தொழுவீர்”
இம்மதம் உணர்த்திடவே இருகை கூப்பினாயோ?
சம்மதம் ஐயா உந்தன் செயல்திறம் வியந்தோமே!
பணிவுக்கு பெயராம் இந்த பெரியவா மூவுலகில் ஒருவரேயாம்!
தணிகை நாதனவன் தன்பெயர் கொண்ட ஸ்வாமி!
மணிகரம் இரண்டைக் கூப்பி மனிதரின் மனதை மாற்றி
மணித்வீபம் அமர்ந்த பெண்ணை மண்ணிற்கு அழைத்தீரோ?
“கரையேறி விட்டேன் நானும் நீங்களும் கரையேறுங்கள்” என
கரைமீது அமர்ந்து கடவுளை இருகரம் கூப்பினாயோ?
தரைமீது வாழும் மாந்தர் திடமான பக்தி செய்ய
பரையான பாலைத் தாயை பக்தியோடு வணங்கினாயோ?
குறையில்லா வாழ்க்கை தன்னை கும்பிட்டு வாழ்வீர் என்று
மறையோதும் மாந்தர் எமக்கு மீளும்வகை உணர்த்தினீரோ?
துறையாடும் தூய வெண்மைத் துறவியே துதிக்கின்றோமே!
இறையெமக்கு இறைவன் இல்லை இவ்வுலகில் நீரே என்போம்!
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 72