மங்களாம்பிகே
மங்களாம்பிகே உன் மலர் பதம் பணிந்தோம்
பொங்கும் மங்களம் தங்கிடச் செய்வாய் நீயே (ம)
அனந்த ஆனந்தமான அற்புத பொருளும் நீயே
ஸனந்தனாதியர் புகழ்ந்திடும் ஸத்தியம் நீயே (ம)
பீடேச்வரி மனதினில் வருவாயே
மந்த்ர பீடேச்வரி மனதினில் வருவாயே
மஹா மந்த்ர பீடேச்வரி மனதினில் வருவாயே
ஸாதகர் ஜபித்திடும் மஹா மந்த்ர பீடேச்வரி மனதினில் வருவாயே
தனை உணர்ந்த ஸாதகர் ஜபித்திடும் மஹா மந்த்ர பீடேச்வரி மனதினில் வருவாயே
மஹாவாக்கியத்தால் தனைஉணர்ந்த ஸாதகர் ஜபித்திடும்
மஹாமந்த்ர பீடேச்வரி மனதினில் வருவாயே (ம)
ஆனந்தம் அருள்வாயே
ஞான ஆனந்தம் அருள்வாயே
ஸ்வரூப ஞான ஆனந்தம் அருள்வாயே
சுத்த ஸ்வரூப ஞான ஆனந்தம் அருள்வாயே
விஷய ரஹித சுத்த ஸ்வரூப ஞான ஆனந்தம் அருள்வாயே
பஞ்சேந்த்ரிய விஷய ரஹித சுத்த ஸ்வரூப ஞான ஆனந்தம் அருள்வாயே (ம)
சக்தியெல்லாம் உன் வடிவே அம்மா
அருள் சக்தியெல்லாம் உன் வடிவே அம்மா
திரு அருள் சக்தியெல்லாம் உன் வடிவே அம்மா
மனத்திரு அருள் சக்தியெல்லாம் உன் வடிவே அம்மா
ஞானியர் மனத்திரு அருள் சக்தியெல்லாம் உன் வடிவே அம்மா
தத்துவ ஞானியர் மனத்திரு அருள் சக்தியெல்லாம் உன் வடிவே அம்மா
சிவ தத்துவ ஞானியர் மனத்திரு அருள் சக்தியெல்லாம் உன் வடிவே அம்மா (ம)
![]()




Users Today : 33
Users Yesterday : 31
Total Users : 52244
Views Today : 51