கோவிந்தன் பெயர்
ஜயசக்தி. ஸ்ரீ ஆசார்யாளின் பஜகோவிந்தம் படித்ததின் தாக்கதில் எழுந்த ஒரு பாடல். நவராத்திரியில் தோடி ராகத்தில் பாடலாமே!
பல்லவி
கோவிந்தன் பெயரை
சேவிப்பாய் பாழ் மனமே
பாவமெல்லாம் போய்விடுமே தினமே (கோ)
அனுபல்லவி
நில்லாத ஜகத்தை நீண்ட பெரும் ஜகத்தை
தின்று தீர்த்திடுமே பொல்லாத காலம்
அதற்கு முன்னே (கோ)
சரணங்கள்
பத்து மாதச் சிறையினில் படுத்திட வேணுமோ
வித்துவான் இலக்கணம்
கத்தினால் காலன் பயம் போகுமோ (கோ)
கீதையின் ஓர் மொழி கங்கையின் ஓர் துளி
சங்கை ஏதும் இல்லை
அங்கை பாகன் அருள்வானே (கோ)
கூற்றுவன் வருவான் கொண்டுனைப் போவான்
மாற்று மருந்தேதும் மரணத்திற்குண்டோ
காற்றோடு போகும் கைச்செல்வம் எல்லாம் (கோ)
பிறந்தாய் இறப்பாய் மீண்டும் பிறப்பாய்
சிறையாம் அன்னையின் வயிற்றினில் கிடப்பாய்
மறைந்துள்ளது உந்தன் மனதிலே பெருஞ்செல்வம் (கோ)
![]()




Users Today : 28
Users Yesterday : 88
Total Users : 58604
Views Today : 270