ஆழ்மனதின் அடியினிலே !

ஆழ்மனதின் அடியினிலே !
மூத்தோர் சொல்அமுதமென்பார் !
கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் !
கசந்தாலும் கற்கண்டே !
உசத்தியாய் உணர்த்திவிடும் !
அசந்திடாதே எத்தினமும் !
அன்பு செயமறந்திடாதே !
என்பு தோல் இவ்வுடலோ
இறந்தவுடன் மண்ணில்தான் !
அதனால்
அசந்திடாதே எத்தினமும் !
அன்பு செய மறந்திடாதே !
நாளைஇருப்போமா என்பதை
நாமறியோம் !
அதனால்
அசந்திடாதே எத்தினமும் !
அன்புசெய மறந்திடாதே !
அன்பு செய்வதுவே
எங்கள் குல வழக்கம் என
திங்களை தினம்தொழுவோம் !
ஸோம ரஸம் எல்லாம்
மனத்தின் உன்மனியாம் !
சடுதியில் இந்தமனம்
சாத்திரம் கேளாது !
விருப்பம் பல கொள்ளும் !
வெந்தனலாய் சினம்கொள்ளும் !
வேந்தனாய் இருந்தாலும்
வேட்கை பல கொள்ளும் !
மனதைநிறுத்திடவே
மந்திரமும் தந்திரமும் !
அலைபாயும் மனதடக்க
அனுதினமும் நம்பூஜை !
ஆவர்த்தி செய்வதெல்லாம்
அதனை அடக்கிடவே !
மந்திரங்கள்உணர்த்துகின்ற
தந்திரங்கள் சில உண்டு !
கணபதி மந்திரமோ
கம்மென்று இருக்கசொல்லும் !
வாலையின் ஆறுமிங்கே
ஆறாதாரக் கொள்கை !
லலிதைக்கு பதினைந்து !
உணர்த்திடும் உனை இங்கு !
யோக பாலையவள்
ஒன்பது சக்கரத்தாள் !
அன்னபூரணியோ
ருசியான தத்துவமாம் !
அருந்தும் உணவெல்லாம்
அவள் சமைத்தஅமுதமாகும் !
குதிரை மேலமர்ந்த குமுத வல்லியவள்
அதிவேகநம்மனதிற்கடிவாளம்
போட்டிடுவாள் !
சண்டிகை வந்திடுவாள் ! மன
சண்டித்தனம்நீக்கிடுவாள் !
வனதுர்க்கை மந்திரமோ
மனப்போக்கை மாற்றிவிடும் !
காளிக்கோ ஹூங்காரம் !
அறியாமை பேய் அழிக்கும் !
வெறியாவும்அடக்கிவிடும்
வேதமுதல்வியாம்
காயத்ரி கடவுளினால் !
மனமேதான் சத்துருவாம் !
அங்கிராவும அதைக் கொல்வாள் !
சூடான மனதினையே
குளிராக்கும் சூலினியும் !
உபாதை வந்துவிட்டால்
நாமத்ரயம் இருக்கு !
குருபக்திசிறந்திடவே
புவனேச்வரி மந்திரமும் !
தினவாழ்க்கை வளம்பெறவே
திதிநித்யாதானிருக்கு !
அவசரம் இல்லாமல்
அனுதினமும் கூறிடவே
தனியான தத்துவமும்
மனதினிலே பிறந்துவிடும் !
மூலமந்திரத்தை
முப்போதும் மறவாதே !
தர்மமும் இதுவேதான் !
உபாஸக தர்மமும் இதுவேதான் !
அஹங்காரம்துளியுமில்லா
அஹங்க்ரக உபாஸனைதான் !
உன்மனதின் உள்ளேதான்
உமையவளும்இருக்கின்றாள் !
நமைகாப்பாள் எத்தினமும் !
சுமை யாவும் இறங்கிவிடும் !
கோபதாபங்கள் சுமைதானே
நம்மனதில் ?
அடுத்த நொடியினிலே
நமன் காத்துநிற்கின்றான் !
தடுத்து நிறுத்திடவே
தாயவளும் இருக்கின்றாள் !
குருவடிவாய்
தடுத்து நிறுத்திடவே
தாயவளும் இருக்கின்றாள் !
அவள் தாளைபணிந்திட்டால்
அந்தகனும் அஞ்சிடுவான் !
சிந்தனையில் எந்நாளும்
சிவசக்திஅமர்த்திவிடு !
உலகமிது சிவசக்தி மயம் !
உணர்த்திவிட்டார் ஸத்குருவும் !
பணக்காசு ப்ரச்சனைகள்
பலவுண்டு பாரிதிலே !
தனைக்காக்க யாருண்டு ?
துதித்திடவே தாளுண்டு !
தூசாக தள்ளிவிடு துயரினையே !
தூயவளின்தத்துவங்கள்
தினம் தினம் மனம் வாங்கி
தூசாக தள்ளிவிடு துயரினையே !
அலைஅலையாய் மோதிவரும்
அகிலத்தில் விஷயங்கள் !
ஆழ்கடலாம்ஆத்மாவில்
அவையெல்லாம் அடங்கிநிற்கும் !
அலையெல்லாம் வெளியில்தான் !
அந்தரத்தில் மிக அமைதி !
 
அமைதி வேண்டுமென்றால்
ஆழ்மனதை அண்டிவிடு !
அங்கேதான் அருட்குருக்கள்
ஆக்ஷி செய்கின்றார் !
உள்நோக்கிப்பார்த்துவிடு !
உண்மையை உணர்ந்துவிடு !
 
ஒம்சக்தி

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments