பிறவழிகள் நமக்கேனோ ?

பிறவழிகள் நமக்கேனோ ?
 
சுத்த பிரதமையில் ஓர் சுத்த சிந்தனை –
(09-02-2016 தை மாத அமாவாசை – ப்ரதமை)
 
தை மாத அமாவாசை
வித்தானது வித்தைக்கு அன்று
சுப்பிரமணியர் அன்று
இப்பிரம்ம வித்தை அறிந்தார்
தப்பாமல் தொடர்ந்து நின்று
இப்பாரில் இனிதாய் தந்தார்
சிதானந்த பெயரைப்பெற்று
உதவி செய்தார் உலகிநோர்க்கு
கதையல்ல கடவுள் பூஜை என
சிதைவீழா வழியை சொன்னார்
அதை அங்கே அனந்தானந்தர்
பாதையாய் போட்டு வைத்தார்
விதம் விதமாய் தோத்திரங்கள்
நிதம் நம்மை கூற வைத்தார்
 
அபிராமி பட்டர் அவரின்
கவுரவத்தை அன்னை காத்த
பவுர்ணமியே இந்த அமாவாசை
 
சுத்த பிரதமையிலே
சுந்தரி பாதம் சேர்ந்தாள்
சித்தி என்றழைப்பாரே
புத்தி மிக உடையாள்
பத்தியாய் இரு என்பாள் – அவளுக்கு
பத்ததியோ மனப்பாடம்
ஸபர்யா
பத்ததியோ மனப்பாடம்
எத்திக்கும் அவள் நிறைந்தாள்
மெத்தனமாய் இருக்காமல்
வந்தனத்தை நாம் செய்வோம்.
பதினான்கு பிரதமையாச்சு
கதி நீயே என கதறியாச்சு
விதி என்றோ நாமறியோம்
நிதி அவளே நாமறிந்தோம்
வியதி பாதம் தன்னில்
கியாதி பல உடையாள்
எதிரே வந்து நிற்பாள்
புவனத்தின் பெயர் கொண்டாள்
தவளத்தின் தன்மை அவளே !
 
இருபத்தி எட்டு ஆண்டு
ருதம்பராபைக்கு ஆச்சு
ஈண்டு அவர்கள் மீண்டும் வந்து
விண்டுரைக்க வேண்டலாச்சு
அண்டமெலாம் அவளின் ஆக்ஷி
அறிந்து கொள்ள யாரோ உளர்
திரிந்து பல செயல்கள் செய்வோம்
புரிந்து கொள்ள பொறுமை தேவை
புரிய வைக்க பாரில் இன்று
அருட்சக்தி ஆற்றல் உளது
கருக்குழியில் செல்ல வேண்டாம்
அருட்புனலில் தினமும் குளித்தால்
உருப்படியாய் வாழ்ந்திடலாம்
கருத்தாய் காதி வித்தை
உருவேற்றி உள்ளே சொன்னால்
நேரே வந்து நிற்பார்
திருத்தணியில் வந்தார் அன்றோ
பிரகன்னாயகியும்
பார்வைக்கு வந்திடுவாள்
அதற்கு ஓர் வழி உளது
பிதற்றவில்லை ஸாக்ஷி உளது
விதவிதமாய் சித்தர் பலரும்
அவனியிதில் அருபுதம் செய்தார்
கவனமாய் காரியம் செய்தால்
அவரைப்போல் ஆகி விடலாம்
தவறாமல் வந்தனம் தினமும்
சிவன் போல சிந்தனை என்றும்
அருட்சக்தி தந்த மந்த்ரம்
உருப்போட்டு உணர்வில் கொண்டால்
திருப்போதம் நினைவில் தோன்றும்
விருப்போடு செய்ய வேண்டும்
அருவருப்பு அகன்று போகும்
நெருப்பு சுடரைப்போன்று
பரத்தின் பார்வை தோன்றும்
பிறகென்ன வேண்டும் இங்கே
அறவாழி அந்தணர் ஆவோம்
பிறவழிகள் நமக்கேனோ ?
 

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments