ஓட்டம்
ஓடும் வரை ஓடட்டும் ஓடம்
ஒய்ந்துவிடும் ஒருநாள் மறு
கரையின் ஓரம்
ஓடும் வரை ஓடட்டும் குதிரை
ஓய்ந்துவிடும் ஒருநாள் ஒருவன்
இறங்கிவிட்டால்
ஓடும் வரை ஓடட்டும் கடிகாரம்
ஓய்ந்துவிடும் ஒருநாள் (சாவி)
இறுக்கம் தளர்ந்தால்
ஒடும் வரை ஓடட்டும் நதியும்
ஓய்ந்துவிடும் ஒருநாள் நீள்
கடலும் வந்தால்
ஒடும் வரை ஓடட்டும் எழுத்து
ஓய்ந்துவிடும் ஒருநாள் நல்
கற்பனை நின்றால்
ஒடும் வரை ஓடட்டும் மின்கருவி
ஓய்ந்துவிடும் ஒருநாள் மின்
விசையும் நின்றால்
ஒடும் வரை ஓடட்டும் இரயிலும்
ஓய்ந்துவிடும் ஒருநாள் சேரும்
இடமும் வந்தால்
ஒடும் வரை ஓடட்டும் வாழ்க்கை
ஓய்ந்துவிடும் ஒருநாள் வயது
முதிர்ந்து போனால்
ஒடும் வரை ஓடட்டும் மூச்சு
ஓய்ந்துவிடும் ஒருநாள் கொடு
காலனும் வந்தால்
ஓடும் வரை ஓடட்டும் மனமும்
ஓய்ந்துவிடும் ஒருநாள் ஓயா
உளைச்சல் நின்றால்
இருக்கும்வரைக்கும்தான் இந்த
ஓடும் அலைச்சல்
கருக்கலில் வா மீதி சொல்வேன்
இன்று மிக மன உளைச்சல்
![]()





Users Today : 19
Users Yesterday : 88
Total Users : 58595
Views Today : 168