புத்த பூர்ணிமாவில் புலர்ந்த கவிதை
புத்தனுக்கு வந்தது ஞானம் அந்த போதியில்
பித்தன் நான் அமர எந்த போதியும் இருக்குதோ
அத்தன் அவன் அமர என்று ஆலமரம் இருக்குது
கத்தும் எந்தன் மனதடக்க எந்த மரம் அமர்வனோ
மரத்தில் அமர்ந்து விட்டபின் மனம் அமைதி ஆகுமோ
சிரத்தில் வைத்து சின்மயத்தை சாரமாய் தொடுவனோ
கரத்தில் கொடுத்து சென்ற குரு காலைபிடி த்தமர்ந்திடில்
துரத்தி நிற்கும் மாய்கையும் தூரதூர தூரமே
பிள்ளை பெண் விட்டகன்ற புத்தனின் வழியெது
கள்ளபுலன் கடிந்தவன் காசினிதில் உயர்ந்தவன்
பிள்ளை காலை பற்றயில் போகமனம் வாருமோ
உள்ளத்திலே துறப்பதே உயர்ந்த துறவு ஆகுமே
நேதி நேதி என்று சொல்லும் நாலு வேத ஸாரமும்
பாதி பாதி படித்து விட்டு பரம்பொருள் நானென்பார்
சேதி சொல்லும் ஸத்குருவை சேர்ந்து காலை பற்றினால்
போதி மரம் அமர்ந்து நிற்கும் புத்தனாய் ஆவமே
நாலும் நாலும் எட்டு என்று கணக்கு சொல்லும் மாந்தரே
காலன் வந்து கதவில் நிற்கும் காட்சி காணவில்லையோ
மாலும் மண்ணில் படுத்தபோது காலில் அம்பு தைத்ததே
மேலும் மேலும் மண்ணில் வந்து மீளவும் பிறப்பதேன்
புத்தன் புத்தி பெற்ற நாளில் பக்குவத்தை நாடுவோம்
சித்தனாக நிற்கையில் சொந்த பந்தம் சுகமதோ
கத்தியுள்ளே இருந்தபோதும் உறை அதில் பற்றுமோ
கத்தியுறை போல நின்று கடமை ஆற்ற வேண்டுமே
புத்தி தந்தார் இறைவனும் கைபேசி குடைவதேன்
சுத்தி நிற்கும் மாந்தரை சுந்தரியாய் காணவே
புத்தி நமக்கிறைவன் தந்தார் பொருளதை புரிவமே
சத்தியமாய் நிற்கும்போது சொன்னசொல் மறக்குமோ
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 52