நல்லதைக் கேளு நல்லதைப் பாரு
அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரம் :.
“பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:|……….
எனத் தொடங்கும், சாந்தி மந்திரத்தின் பொருள் கொண்ட ஓர் பாடல்
நல்லது சொல்லும் வேதத்தைப் பாடு (ந)
எத்தனை நாட்களோ இந்த வாழ்க்கை
மொத்தமாய்த் தருவார் இமையோர்கள் (ந)
இந்திரன் தருவான் நல்லிதயம் அந்த
சூரியன் தருவான் பல நன்மைகளை
சிந்திக்கும் கருடன் சிந்தனை தருவான்
சிந்தனை உள்ளே சந்ததம் செலுத்தி (ந)
குணங்களின் தந்தை குருவும் தருவார்
வணங்கிடு அவரை மந்திரம் சொல்லி
சாந்தியே எங்கும் சாந்தியே எங்கும்
சாந்தியே நிலவ சாத்திரம் சொல்லும் (ந)
![]()





Users Today : 29
Users Yesterday : 88
Total Users : 58605
Views Today : 280