பெரிய பெரிய பதவிகள் வேண்டும்,
பெரிய பெரிய கார்கள் வேண்டும்,
பெரிய பெரிய பங்களா வேண்டும்,
உலகம் சுற்றி வர வேண்டும்
சிறந்த அறிஞனாக வர வேண்டும்
இப்படி குழந்தை
இருக்க வேண்டும் என்ற ஆசையுடன்
தன் மடியில் தாய்ப்பால் ஊட்டும் தாய்!
பெரிய பெரிய பதவிகள் வேண்டும்,
பெரிய பெரிய கார்கள் வேண்டும்,
பெரிய பெரிய பங்களா வேண்டும்,
உலகம் தன்னை சுற்றி வர வேண்டும்
சிறந்த அறிஞனாக வர வேண்டும்
இப்படி தான் இருக்க வேண்டும் என்ற
எந்த ஆசையும் இல்லாமல்
தாய் மடியில் தாய்ப்பால் அருந்தும் குழந்தை!
சுயநலம் இல்லாத இடம்!
![]()




Users Today : 6
Users Yesterday : 88
Total Users : 58582
Views Today : 35