ராகம் : கௌரி மனோஹரி
எழுத்து : நாகா
குரல் : ஸ்ரீமதி அபர்ணா
பல்லவி
உடம்பைப் பெரிதென நினையாதே
மனமே அனுதினமே உடைந்து வீழ்ந்து தேயும் (உ)
அனுபல்லவி
சம்சார சாகரம் பொல்லாது
ஆங்காரம் இதிலே ஆகாது (உ)
சரணம்
நிலையான நித்திய சுகானுபவம் நிறைந்திருக்க
அலையென ஆன்மசுகம் அக்கரையில் ஆடிநிற்க
மலையான மனோன்மணி மேனியைக் கடந்திருக்க
விலையேதும் பெறாத உடலை தினமும் எண்ணி எண்ணி (உ)
(ஆங்காரம் : அஹங்காரம்; மனோன்மணி : மனதின் ஓர் ஓர்நிலை) 23-02-2020
![]()




Users Today : 38
Users Yesterday : 65
Total Users : 52109
Views Today : 63