பல்லவி
மாயையில் உழலும் மனதே
மந்திரம் சொல்லுவாய் தினமே (மா)
அனுபல்லவி
இன்னுமொரு ஜென்மம் எடுத்திட வேணுமோ
தன்னை அறிய தடையேதும் உள்ளதோ (மா)
சரணம்
நாலு வேதத்தை நன்றாய் பிழிந்தது
ஆல மரத்தடியில் சொல்லாமல் சொன்னது
மாலயனும் காணாத மகிமை வாய்ந்தது
சாலச்சிறந்த சத்குரு செவியில் தந்தது (மா)
ஐயும் கிலியும் சவ்வும் ஜபித்திட்டால்
மெய்யும் சிலிர்க்கும் மனமும் குளிரும்
உய்யும் வழியது உன்னெதிரே நிற்க
செய்யும் செயலெல்லாம் சட்டென விட்டு (மா)
கம்மென்று சொல்லிட காமமும் தொலையிது
ஆம்நாய மந்திரம் ஆயிரம் உள்ளது
அம்மோடு க்ஷம் வரை ஐம்பத்து ஒன்றது
சம்ஹர சம்ஹர என்றால் சட்டென மறைவது (மா)
![]()





Users Today : 17
Users Yesterday : 88
Total Users : 58593
Views Today : 146