[responsivevoice_button voice=”Tamil Female”]
மரண என்ற மூன்றெழுத்து
மரணித்து விட்டது
ரமண என்ற மூன்றெழுத்தில்
ரமண என்ற மூன்றெழுத்து
ரமித்து விட்டது
அருண என்ற மூன்றெழுத்தில்
மடல் எழுதி விரைந்தார்
மவுனயோகத்திற்கு!
கையொப்பம் இட
நேரமில்லையாம்!
மவுனமாய் இரு என்று
மவுனமே பேசியது
அதுதான்
ரமண கீதையோ?
மிக நீண்ட
வேத நதிகள்
கலந்துவிட்டன
விசார சாகரத்தில்!
பரம்பொருளை
வெளியே தேடியது வேதம்
நேதி நேதி என்றது!
உள்ளே தேடு என்றார்
நான் நான் என்றது!
குகைக்குள் இருந்ததால்
என்னவோ
கர்ஜித்தாரோ
நான் நான் என்று!
மாதாவைக் கண்டார்
மாத்ரு பூதராய் கோயில்
எழுப்பி!
பிலத்தில் ஸ்ரீசக்ரம்!
ஸ்ரீவித்தையின்
ரகசியம் சிகரமாய்!
(வேதாந்தக்கவியோகி)
29.12.2019
![]()





Users Today : 19
Users Yesterday : 88
Total Users : 58595
Views Today : 173