பாடிக்கொண்டே இரு பாழ்மனமே
ஆடிக்கொண்டே இருக்கும் ஆண்டவனை (பா)
அனுபல்லவி
கோடியிலே ஒருவருக்கே கொடுத்து வைத்தது
தேடியும் கிடைக்காத தெய்வப் பெரும்பேறு
(பா)
சரணம்
பாம்பும் புலியும் பக்கத்தில் நின்றிட
அம்புலி அம்மையும் அருகில் அமர்ந்திட
கங்கை கொண்ட சடை கோலம் விரிந்திட
கொங்கை மங்கை பாகன் கொண்ட புகழினை (பா)
ஞானாநந்தன் என்று பெயர் வைத்தானே குருநாதன்
வீணாய்கவலைகொண்டுழல்வதும் அழகாமோ
தானாய் தன்னில் தான் மகிழ்ந்தாடிட வேண்டாமோ
ஊரில் உள்ள மக்கள் ஓராயிரம் சொன்னாலும் (பா)
ஐம்பத்து ஒன்றும் அழகாய் கடந்தது
ஐம்பத்து ஒன்றுதான் அவரது உடம்பு
ஐம்பத்து ஒன்றில்தான் அகிலமே ஆடுது
வம்பேதும் இல்லாமல் வாயது நிறைந்திட (பா)
![]()




Users Today : 38
Users Yesterday : 65
Total Users : 52109
Views Today : 65