எதிர் கொண்டழைக்க வருவாயா
கதிர் காமத்திறைவா கந்தா கதிர்வேலா
மதி மாறிடும் குணம் மாறிடும்
விதி மாறிடும் வினையோடிடும்
வகை செய்தென்னை இன்றே (எதிர்)
மலை குன்றினில் மயில் மீதினில்
கலை போன்றோரு சிலை செய்தார் – மனம்
நிலை நின்றிட தலை மீதினில்
உன்பாதந்தனை வைத்தேன்
வினை வென்றேன் வழி கண்டேன் (எதிர்)
கனல் தீயோ கரம் பதினாறோ
புனல் காற்றோ உன் வடிவம்
சினம் மாறிடும் சிரம் தாழ்ந்திடும்
மறையோ இல்லை மருந்தோ ஏதும்
நான் அறியேன்
சிறுகுழந்தை உனை பணிந்தேன்
வரம் தருவாய் வினை அழிப்பாய் (எதிர்)
![]()





Users Today : 19
Users Yesterday : 88
Total Users : 58595
Views Today : 181