குமரன் ஐந்து (குமார பஞ்சகம்)

  1. குருவாய் வந்தான் குமரன் அவனே
    சருகைக் கிடந்த சீவனைக் காத்தான்
    இருவினை தன்னை ஈராய் கிழித்தான்
    செருவில் சூரனை சக்தியால் கொன்றான்
  2. குஹையில் வசிப்போன் குன்றம் நிற்போன்
    பகையை கடிந்தே பக்குவம் தருவான்
    சிகையில் கிரீடம் சீராய் தரித்தான்
    சகஜ நிலையை சரியாய் அருள்வான்
  3. சக்தியின் கணையை செங்கையில் தரித்தான்
    பக்தியின் மாந்தரை பக்கத்தில் சேர்ப்பான்
    சுக்கிர குலத்தை சக்தியால் பிளந்தான்
    முக்தியை கரத்தில் முன்னே தருவான்
  4. மனமே மனமே தாளினை மறவேல்
    மனதின் அதிபதி முருகன் கைவேல்
    சினத்தைக் கொண்டே அசுரர் அழித்தான்
    தினமும் அவன்தாள் தொழுவாய் தொழுவாய்
  5. செவியில் உரைத்தான் ஓமெனும் மந்திரம்
    தவித்திடும் மாந்தர் நிழல்தரும் தருவாம்
    அவியினை தாங்கும் அமரரின் தலைவன்
    புவியிதை காக்கும் பரிஉடை பரமாம்

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments