பொன் ஒன்று கண்டேன்

நடமாடும் தெய்வம் மஹா பெரியவாளை தரிசித்த விதத்தை பாடலாக எழுதியுள்ளேன்.

மெட்டு : பொன் ஒன்று கண்டேன்

தாள் ஒன்று கண்டேன்
மனம் இங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

பூ ஒன்று கண்டேன்
அகம் காண வில்லை
ஏன்னென்று நான் சொல்லாகுமா ?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ?

நடமாடும் தெய்வம்
நவ நாதபீஜம்
அலங்காரம் செய்யும்
சிலை மேலும் ஒளிரும்

நடமாடும் தெய்வம்
பணிவான பழக்கம்
பழங்கால சொல்லில்
உயிராக மின்னும்

துள்ளி வரும்
உள்ள மெலாம்
துள்ளி வரும்
உள்ள மெலாம்

துவண்டு விழும்
துன்ப மெலாம்
துவண்டு விழும்
துன்பமெலாம்

மண்ணோடு வினையகலும் கண்
அந்த கண் அதுவோ
அந்த கண் அதுவோ
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

தாள் ஒன்று கண்டேன்
மனம் இங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

நான் பார்த்த கண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த கண்ணை
நான் பார்க்க வில்லை
நீ பார்த்த கண்ணை
நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை

என் விழியில்
நீ இருந்தாய்
என் விழியில்
நீ இருந்தாய்

குரு வடிவில்
அவர் இருந்தார்
குரு வடிவில்
அவர் இருந்தார்

நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

தாள் ஒன்று கண்டேன்
மனம் இங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

 

பாடியவர் : திரு.ம.சுரேஷ் என்கிற சூர்யா

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments