நாகாவின் புதுமொழிகள்
கண்ணில்லாமல் உள்ளே பார்ப்பவன் குருடன்
கண்ணிருந்தும் உள்ளே பார்ப்பவன் ஞானி
கண்ணிருந்தும் உள்ளே பார்க்காதவன் அக்ஞானி
காதில்லாமல் உள்ளே கேட்பவன் செவிடன்
காதிருந்தும் உள்ளே கேட்பவன் கலைஞன்
காதிருந்தும் உள்ளே கேட்காதவன் மூடன்
காலில்லாமல் கோயில் வாசலில் இருப்பவன் முடவன்
காலிருந்தும் ஒரே இடத்தில் இருப்பவன் ஞானி
காலிருந்தும் கோயிலுக்கு செல்லாதவன் அக்ஞானி
பணமில்லாமல் தானம் செய்யாதவன் இயலாதவன்
பணமில்லாமல் இருந்தாலும் இருப்பதை அளிப்பவன் வள்ளல்
பணமிருந்தும் பிறர்க்கு அளிக்காதவன் கஞ்சன்
மனமில்லாமல் செயல் செய்பவன் மூடன்
மனமில்லாமல் செயல் துறந்தவன் அறிஞன்
மனமிருந்தும் நன்மை செய்யாதவன் வீணன்
பூ இல்லாததால் பூஜை செய்யாதவன் ஏழை
பூ இல்லாமலும் பூஜை செய்பவன் பக்தன்
பூ இருந்தும் பூஜை செய்யாதவன் பாதகன்
குரல் இல்லாததால் பாட முடியாதவன் பாவம்
குரல் இல்லாமலும் ஸ்வரம் சேர்ப்பவன் பாடகன்
குரல் இருந்தும் பாடாதவன் ஞானசூனியம்
கரு இல்லாததால் கவிதை பாடாதவன் கவிஞன்
கரு இல்லாமலும் கவிதை படைப்பவன் மஹாகவி
கரு இருந்தும் கவிதை பாடாதவன் வீணன்
சோறு இல்லாமல் சாப்பிடாதவன் ஏழை
சோறு இல்லாமலும் திருப்தி அடைபவன் நித்ய த்ருப்தன்
சோறு இருந்தாலும் சாப்பிடாதவன் சோம்பேறி
தூக்கம் இல்லாமல் கனவு வராதவன் மோஹி
தூக்கம் இல்லாமலும் கனவு காண்பவன் கலாம்
தூக்கம் இருந்தாலும் கனவு வராதவன்
துக்கி
![]()




Users Today : 33
Users Yesterday : 31
Total Users : 52244
Views Today : 53