திரிசதி யாகம்

திரிசதி யாகம்
அந்தர் பஹிச்ச பூர்ணஸ்யாம்
ஆனந்தாம்ருத லக்ஷணாம்
ஸந்ததம் மனஸி பாவயேத்
ஸத்குரும் ஸ்ரீகாமேச்வரம் !
திரிசதி யாகமது திருவருளால் நடக்கிறது ! அதனை
பரிவுடனே பம்பாயின் பெரியோர்கள் நடத்திட
அரிதான யாகத்தில் அனைவருமே பங்கேற்றோம் !
சிறியவனாம் என்னையும் சேர்ந்திடவே குருவருள்
கரிசனமாய் கவிதையை உருவாக்கி தந்தது !
அன்னைக்கு பெயர் உண்டு ஆயிரம் ஆயிரமாய் !
அதை முழுதும் அறிந்திட ஆயிசோ பத்தாது !
கதை உண்டு அவளுக்கு கடல் போன்ற பெரியதாய் !
கருத்தினை அறிந்திடவோ காலமும் போதாது ! அன்று
அருளாலே நாமத்திற்கு ஆயிரமாய் கவியெழுத
திருவருளும் தந்தது திருவடியின் புகழது! இன்று
திரிசதிக்கு குறள்போல எழுதி வைத்த போதிலே
திரிசதியின் யாகத்தில் தீர்மானம் ஆனது,
திருவருளே தரணியிலே தைரியத்தை தருவது !
தமிழும் படிக்கவில்லை !
வடநூலும் வளரவில்லை !
படித்து அறிந்திடவோ
புத்தியும் போதவில்லை ! இருந்தாலும்
கவியெழுத கைவிரலை
அசைப்பதெலாம் அவள் அருளே !
அதுவேதான் இப்போதும்
அருட்சக்தி குருவாக
அருளாலே அருளியது !
முன்னூறு குறளுக்கும்
முரணிருக்கும் இலக்கணத்தில் !
தன்னார்வ கோளாறால்
பிழையிருக்கும் சீரதனில் !
இருந்தாலும் ஏற்றுவிட்டீர் ! ஏனென்றால்
அன்னையை அழைப்பதிலே
குழந்தைக்கு ஆசையுண்டு !
இலக்கணம் மாறினாலும்
இலக்ஷியம்தான் பெரியது !
அமுது படைப்பதிலே
அன்னைக்கு இணையில்லை !
அவள் அருள் என்ற அமுதிற்கு
இன்சுவை குறைந்திடுமோ ?
என்ன சொன்னாலும்
எப்படித்தான் சொன்னாலும்
என்னாவு அவளைத்தான்
ஏக்கமாக அழைக்கிறது ! அதனால்தான்
ஏற்றுக் கொள்ள பெரியோர்க்கு
ஏதுவாக உள்ளது !
பெரியோர்கள் சபைதனிலே
பேச பயந்தாலும்
வாயால் அவள் புகழை
வேதம்போல் சொல்லிடவே
வேகம் மிக உண்டு !
வேதாந்தம் சிறிதுண்டு !
லகார ரூபா என்ற ஒரு நாமத்திற்கு
லலிதமான ஒரு குறளை
லலிதாவே தந்திட்டாள் ! அதுவே
லகாரமாய் விளங்கும் லலிதா தேவிக்கு
உலகம் எல்லாம் உயிர் ! என்பது !
உலகமெலாம் அவள் வடிவே !
உயிர் தருவது அவள் அருளே !
காணும் மனிதரெல்லாம்
காமாக்ஷி அவள் வடிவே !
இப்படி நினைத்திட்டால்
தப்பேதும் தெரியாது !
தத்துவமும் புரிந்து விடும் !
அ என்றால் சிவ ஞானம் என்பார் குருநாதர் !
அதனால்தான்
அம்மா அப்பா அண்ணண் அத்தை யென்று
அனைத்து உறவுகளும் அ வில் ஆரம்பம் !
அதிகம் பேசவில்லை !
அன்பால் கூறுகின்றேன் !
பிழையைப் பொறுத்து நீங்கள்
பக்குவமாய் ஏற்றிடுவீர் !
எழுதியதும் நானில்லை !
ஏற்பவனும் நானில்லை !
ஏகாந்த பூஜிதா தான்
எனக்குள்ளும் இருக்கின்றாள் !
எழுதியது அவளேதான் !
பழுது பார்த்து புரியவைத்தவளும் அவளேதான் !
சுவடி வடிவினிலே
சுற்றியதும் அவள் அருளே !
பிரித்து வெளியிட்டு
புகழ்வதுவும் அவள் வடிவே !
இப்படி நினைத்துவிட்டேன் !
இனிமையாக ஏற்றிடுவீர் !
எழுதி போட்டதனை ஒழுங்காக்கி தந்த எந்தன்
குருநாதர் தந்தைக்கு எந்தனது முதல் வணக்கம் !
கருப்பொருளை கருத்தில் வைத்து திருத்தி தந்தவர்க்கு
பெரிதான என் வணக்கம் புவியினிலே நான் செய்வேன் !
கரிசனமாய் சுவடியாக்கி அற்புதமாய் தந்தவர்க்கு
ஆற்றிடுவேன் வணக்கத்தை அவர் புகழும் ஓங்கட்டும் !
ஆன்றோர் சபையிதனில்
தன்னிறைவாய் தெரியவைத்த
தாய்போன்ற பெரியோர்க்கு
தலை சாய்த்து வணங்குகிறேன்
நன்றிதனை நவிலுகின்றேன் !
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பார் !
ஸ்ரீவித்தை கைக்கொண்ட சித்தாந்த மனிதர்க்கு
இக்குறள் மனவுறுதி சிறப்பாக தந்திடட்டும் !
வேண்டியே விடைபெறுகிறேன் !
வேதாந்தம் மனம் உரட்டும் !

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments