தலையிடாதே மனமே எதிலும்
தலையிடாதே
கண்ணன் இருக்கிறான் கண்டு கொள்ள
மண்ணிலே வருவான் என்றும் துணை கொள்ள
என்ன சொன்னாலும் சொல்லட்டும்
என்ன எதற்கு என்று எவரும் கேட்கட்டும்
இலையிலே விழுவதை உண்டு கொள்ளு
தலையிலே பாரமின்றி கொஞ்சம் தள்ளி நில்லு
உடம்புக்கு வந்தால் உற்ற துணை யாருமில்லை
திடமாக நம்பினால் வந்திடுவான் தூரமில்லை
கடைசி காலத்தில் படுத்தால் மரண பயமில்லை
உடைந்து போகாதே உள்ளத்தில் சோர்வில்லை

(Bibhatsa Rasa)
(Voice : Smt. Seetha, Chennai)
![]()





Users Today : 42
Users Yesterday : 95
Total Users : 59934
Views Today : 179