எனக்கென்ன குறைச்சல்?
நாயகன் விட்டலன் எனக்கு முன்னே இருக்க (எனக்கென்ன)
நாளும் பக்தர் கூட்டம் என்னோடு இருக்குது
மூளும் பக்தி மேகங்கள் மழை பொழிய நிற்குது (எனக்கென்ன)
இன்று காலை கூட எனக்கு முன்னே வந்தான்
கன்றை அவிழ்த்து விட்டு பாலை குடித்துச் சென்றான்
கோதை இருக்கிறாள் மாலை சூடி நிற்கிறாள்
பாதையை விடு பார்க்க போகணும் என்றான் (எனக்கென்ன)
இன்று என்னோடு இரு கண்ணா என்றேன்
நின்று நாமதேவரிடம் நாளை செல்லலாம் என்றேன்
உன்னோடு இன்றிருந்தால் உளுந்து வடை உண்டோ என்றான்
ஆஹா அதற்கென்ன ஆக்கித் தருவேன் என்றேன் (எனக்கென்ன)
![]()




Users Today : 33
Users Yesterday : 31
Total Users : 52244
Views Today : 72