எமனுக்கு என்ன வேலை? பண்டரிபுரம் செல்லும் வேளை!
வேசம் தரித்த பக்தர் நாவில் ஓசை!
பாசம் வீசும் அந்தகனுக்கேன் ஆசை?
நாமகோஷம் கேட்குதுபார் நாலுபாட்டம்
சேமமாக செல்லுதுபார் பக்தர் கூட்டம்
காம குரோதம் விலகுதுபார் காமகோட்டம்
பாமரனும் சொல்லலாம் பரம வேதாந்தம்
கோவிந்தா கோவிந்தா என்றால் போதும்
ஆவி அள்ளும் அந்தகனும் ஓடும் தூரம்
கோவில் கோபுரம் தெரியுது நன்றாய் பாரும்
தாவித்திரியும் மனம் மெல்ல சாந்த மாகும்
![]()




Users Today : 6
Users Yesterday : 88
Total Users : 58582
Views Today : 45
Fine