உறக்கம் போச்சுதே உன்னாலே கண்ணா
ஊன் உறக்கம் போச்சுதே (உ)
எப்பொதும் உன் நினைவு தப்பாமல் தந்துவிட்டாய்
செப்பினேன் உன் நாமம் ஜெபமாலை தந்துவிட்டாய் (உ)
பாயிலே படுக்கையிலே பரந்தாமா உன் வடிவம்
வாயிலே உன் பெயரோ வாமனா எப்பொழுதும்
தாயினும் சிறந்தவன் நீ சக்கர தாரி அன்றோ
கோயிலில் விளங்குகின்ற கொற்றவா உன் சரணம் (உ)
வேதம் நீ வேதாந்தம் நீ
போதம் நீ புராணம் நீ
நாதம் நீ நல்லவன் நீ
பாதம் பற்றினேன்
வீடுபேறு தாராயோ (உ)
![]()




Users Today : 6
Users Yesterday : 88
Total Users : 58582
Views Today : 41
கவியோகியின் கவிதையில் கிறங்கிபோனோம்