எனக்கென்ன சொந்தம் இருக்கு
விட்டலனை விட்டால் இந்த
உலகத்தில் வேறென்ன பந்தம் இருக்கு
அன்னையிடம் பாலைக் குடித்தேன்
ரசமில்லை, ரமித்து விட்டேன்
நாம ரசம் நன்றாய் இருக்கு
அண்ணன் தம்பி அத்தை பாசம்
எல்லாமே எனக்கு வெகு தூரம்
விட்டலனே வருவான் அந்த நேரம்
பிறவி பல எடுத்து அலுத்து போனேனே
துறவியாய் துறக்க மனமும் வல்லையே
சுரத்துடன் பாடல்பாட சூர்தாசர் இருக்கிறார்
கஷ்டம் என்றால் அவனேதான் பெரிய சொந்தம்
இஷ்டமுடன் வருவானே பாரம் இறக்க
அஷ்ட சித்தி வேண்டாம் அவனிருக்கான் போதுமே
![]()




Users Today : 6
Users Yesterday : 88
Total Users : 58582
Views Today : 47