இறைவா நான் உன்னை
நேசிக்கிறேன்
அதனால்
நான் விரும்பிய வற்றுக்கெல்லம்
மேலாக
நீ அளிப்பதனால்
என் நேசிப்பு
எதிர்பார்ப்போடு
ஆகிவிடுமோ
என்று தோன்றுகிறது.
நான் இனி எதையும்
விரும்பப்போவதில்லை,
என் நேசிப்பு நிஜமானது
என்று நீ ஒப்புக்கொள்ளும் வரை.
(ஒப்பீடு : திருக்குறள் :
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.)
![]()




Users Today : 13
Users Yesterday : 44
Total Users : 51875
Views Today : 131