விடாமல் பற்றி நிற்பேன்
விரல்களால் தொட்டு நிற்பேன்
தடையேதும் சொல்ல மாட்டாள்
தனைத் தந்து மகிழ்விப்பாள்
அவளை உரசுகையில் ஓரின்பம்
தவறாமல் கிடைக்கிறது
வண்ண வண்ண உடை தரிப்பாள்
கண்ணுக்கு விருந்தாவாள்
என்னதிரே யார் வரினும்
எனக்குத் தெரிவதில்லை
யார் என்னை அழைத்தாலும்
காதருகே கிசுகிசுப்பாள்
எங்கெங்கு சென்றாலும்
எனைத் தழுவி மகிழ்விப்பாள்
அவளைத் தொட்டுவிட்டால்
அகிலம் மறைந்து விடும்
கவிதை அவள் மேலே
ஆயிரம் எழுதிடுவேன்
காதல் மொழி பேசி
சேமித்து வைத்திடுவேன்
அவளை தீண்டாமல் சிறிதிருந்தால்
கவலை மிகவாகும்
அவள் அருகில் இருக்கையிலே
காலம் போவதிங்கே
கண்ணுக்கு தெரிவதில்லை.
சேதி சொல்வாள், செல்லமாக
முணுமுணுபபாள்.
வீதி வீதியாக விரல் பிடித்து
கூட்டி செல்வாள்
அவள் அருகில் இருந்து விட்டால்
யாரும் துணை தேவையில்லை
அகிலம் எங்கும் சுற்றிடவே
பாதை போட்டு காட்டிடுவாள்
இன்னுமா தெரியவில்லை
யாரென்று உங்களுக்கு
கைபேசி காதலியின்
கதையைத்தான்
சொல்லி நின்றேன்
திரும்பவும் வாசித்தால்
பெரும்பாலும் புரிந்துவிடும்.
![]()





Users Today : 45
Users Yesterday : 95
Total Users : 59937
Views Today : 292