
மனிதர்கள் மட்டுமல்ல
மரங்களும் அழுகின்றன
உன் மரணச் செய்தி கேட்டு
முகமூடி அணிக என்று
உன் குரல் கொடுத்தாய்
உன் முகமுழி காணெவென்று
இன்று மாந்தர் கூட்டம்
அப்துல்கலாமுக்கு ஆப்தன் நீ
எப்போதும் அவருக்கான தூதன் நீ
இப்போது அவரைக்காண
என்ன அவசரமோ
நீ நட்ட மரங்கள்
நீள வளருகின்றன.
ஆனால் அதைக்காணாமல்
நீ பட்ட மரமாய்ப் போனாயோ
நகைச்சுவையில் நல்ல கருத்து
நல்கினாய்
தகையும்போது தரணி
துறந்தாயே
டேக் டைவர்ஷன் என்று எங்களை
டேக்கில் சிரிக்க வைத்தாய்
டேக் டைவர்ஷன் எடுத்து
திரும்ப வருவாயோ
யானைக்கு திலகமென
யாவரையும் சிரிக்க வைத்தாய்
நெற்றி திலகம் வைத்து
நீங்கா இடம் சென்றாயோ
அன்று சிரித்து வலித்தது வயிறு
இன்று அழுது வலிக்கிறது இதயம்
இரங்கல் பா : நாகசுந்தரம்
![]()




Users Today : 2
Users Yesterday : 65
Total Users : 52073
Views Today : 2