ஆட்டத்தை முடித்துக்கொள்
யமனை அந்தகன் என்று
யார் சொன்னது?
அன்பானவர்களைப்
பார்த்து பார்த்து அல்லவா
அழைத்துக் கொள்ளுகிறான்.
யமன் நடுங்க அழைப்பான் என்று
யார் சொன்னது?
சொந்தங்களை சத்தமில்லாமல்
அல்லவா அழைத்துக் கொள்கிறான்.
அவனை கொடுங்க்கூற்று என்று
யார் சொன்னது?
வாரிக் கொடுப்பவர்களை
கொடுக்காமல் அல்லவா
அழைத்துக் கொள்ளுகிறான்.
அவனை தர்மராஜா என்று
சொல்கிறார்கள்,
தர்மமில்லை தாயுள்ளம்
கொண்டவரை தயவில்லாமல்
அழைப்பது, ஓ ! புரிகிறது, அவன் பிள்ளையே (யுதிஷ்டிரன்)
பொய் சொன்னவன்தானே.
யமலோகத்தில் எலக்ஷனோ?
நல்லவர்களை தன் பக்கம்
இழுத்துக் கொள்கிறான்.
டுவென்டி டுவென்டி
முடியப்போகிறது,
யமனே உன் ஆட்டத்தை
முடித்துக்கொள்.
(கவியோகி)
![]()





Users Today : 17
Users Yesterday : 88
Total Users : 58593
Views Today : 161
நகைச்சுவையான நல்ல கவிதை…