பாரதி இன்றிருந்தால் குடுகுடுப்பை
பாட்டை இப்படி எழுதியிருப்பாரோ?
(கற்பனை – நாகசுந்தரம்)
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
உறவுகள் சேருது: சண்டைகள் தொலையுது
சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளி,
பேதபுத்திகாரருக்கு நல்ல குறி சொல்லு
பொறாமை போகுது; பக்குவம் வருகுது
உறவினை ஒதுக்கி ஊர்விட்டுப்போனால்
சாவான் சாவான் அனாதையாய் சாவான்
ஒருவருக்கு ஒருவர் உதவியாய் இருங்கள்
அன்பு பெருகுது ஆதரவு வளருது
விழுதுகள் உறவுகள் என்றே
விதவிதமான வாட்சப் குழுக்களில்
வாழ்த்துகள் வருகுது வளர்ச்சி பெருகுது
சொந்த பந்தத்தை தொலைத்தது போதும்
தந்தி அடிக்கையில் தாவி வருகுது
எந்திரமான வாழ்வு மாறுது ஏற்றம் ஆகுது
வந்த உறவுக்கு பந்தி போடுது
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு,
சொல்லடி, சொல்லடீ, மலையாள பகவதீ.
அந்தரி, வீரி, சண்டிகை, சூலி;
குடுகுடு குடுகுடு”
![]()