வீரசுதந்திரம்
(கவிதைப் போட்டி)
வீரசுதந்திரம் பெற்று விட்டோமென்று
வீணாய் மெத்தனம் கொள்ளாதீர்
தீரர்கள் தன்னுயிர் ஈந்தாரே அதை தாங்கியே
காத்திட வேண்டாமோ
பாருக்குள் நாடிந்த நல்நாடு பாதையை
அறிந்திட வேண்டாமோ
போரிட்டு மடிந்தனர் முன்னோர்கள்
பாதுகாத்திட மனமும் வேண்டாமோ
பரங்கியர் வாணிபம் செய்ய வந்தார்பின்
பாரத நாட்டையே அடிமை செய்தார்
ஊரிலே உண்மையாய் வாழ்தோரை
உண்டிக்கு ஓடிடும் வகை செய்தார்
தேரிலே வலம்வரும் மன்னரையே
தடுமாறி சோம்பரில் விழவைத்தார்
கூரிய வாள்தனை வீசுகின்ற அந்த வீரர்கள்
ஆயிரம் மடிந்து விட்டார்
அகிம்சை என்றொரு வாள் கொண்டே
அதிர வைத்தோமந்த அந்நியரை
பகிரங்கமாகவே பாட்டெழுதி அவரை
பதற வைததானே நம்பாரதியும்
சகிக்க ஒண்ணாத சங்கடங்கள் அதை
சகித்துக்கொண்டாரே நமக்காக
தகித்திடும் வெய்யிலில் தண்டி சென்றே
துளிர வைததாரே நம் சுதந்திரத்தை
செக்கிழுத்தார் ஒரு சிதம்பரனார் சுட்டு
கொன்றார் வாஞ்சி நாதனுமே
உக்கிரகமான ஒரு வேடமிட்டு ஒண்ட
வந்தோரை மண்ணில் ஓட வைத்தார்
தக்க வைத்தார் தனியொரு சுதந்திரம்
தட்டில் வைத்தே அவர் நகர்ந்து விட்டார்
மிக்கவே தலைக்கனம் கொண்ட மனிதரை
மண்ணை விட்டே துரத்தி விட்டார்
அன்பு மிக்கோர் வாழ்ந்திடும் நாட்டிலே
கொடு அன்னியருக்கு இடமுண்டோ
என்பு தோல் விற்றிடும் ஏகாதிபத்தியம்
இன்னாட்டில் இனியும் எடுபடுமோ
வம்புகள் செய்திட வந்தாரே அவரை வீரத்தால்
விரட்டியும் விட்டோமே
நம்பிக்கை கொண்ட நல்லவரால் நாடு பெற்றதே
நல்ல விடுதலையை
முன்னோர் செய்திட்ட தியாயகங்களை
பிள்ளைகள் அறிந்திட செய்வோமே
மின்னியல் மயமான இவ்வுலகில்
மாய்ந்திட்ட மனிதரை நினைப்போமே
தன்னியல்பான அன்புவயல்தன்னை
தரணிமுழுதும் பயிர் செய்வோமே
சென்னியில் வைத்து மதிப்போமே
பெற்ற வீர சுதந்திரம் காப்போமே
![]()