படைப்பு
படைக்கும் பிரம்மனைப் பற்றி
ஒரு கவிதை படைத்தேன்
அவன் களித்தான்
கலிப்பாவா என்றான்
இல்லை வஞ்சிப்பா என்றேன்
வஞ்சிக்க மாட்டேன் என்றான்
படுக்க வெண் பா
தரட்டுமா என்றேன்
ஆசிரியப்பாவை கேட்டு
சொல்கிறேன் என்றான்.
படைப்புக்கே ஓர்
படைப்பு என்று
ஹைக்கூவில் கூவட்டுமா என்றேன்.
என் துணையிடம்
அகவும் மயில் உண்டு
அகவல் தா என்றான்.
அனைத்தையும் தருவேன்
கவசம்போல் காப்பாய் என்றேன்.
படைப்பின் அருள் கிடைத்தது.
இனி என்னை படைக்காதே
என்றேன். பிறவிக்கு
முற்றுப்புள்ளி வைத்தான்.
![]()