இந்தக் காலத்துப் பையன் ஒருவன் கல்யாணம் செய்து கொண்டால் செலவு அதிகமாகும் என்று கூற
அவனுக்கு நான் அளித்த ஓர் கவிதை
இந்தக் காலத்து யுவதி,
கைக்கு வளையல்
கேட்க மாட்டாள்
கைபேசி போதும்!
கழுத்துக்கு நெக்லஸ்
கேட்க மாட்டாள்
கழுத்தில் மாட்டும்
(புளு டூத்)
ஏர் போன் போதும்!
சேலை கேட்க மாட்டாள்
கிழிந்த ஜீன்ஸ் போதும்!
இடுப்புக்கு ஒட்டியாணம்
கேட்க மாட்டாள்
லெதர் பெல்ட் போதும்!
காலுக்கு கொலுசு
கேட்க மாட்டாள்,
நூறு ரூபாய் கட்டை
ஹீல்ஸ் போதும்!
பட்ஜெட் இடிக்காது பையா
கல்யாணம் பண்ணிக்கோ!
![]()